இலங்கைசெய்திகள்

தொழிற்சங்கங்களுக்கு எதிரான அடக்குமுறை – ILO, ஐரோப்பிய ஒன்றியத்திடம் முறையிட நடவடிக்கை!!

Complaint

நீதிமன்ற தடையுத்தரவுகளை பெறுவதன் மூலம் தொழிற்சங்கங்களுக்கு எதிரான அடக்குமுறைகள் தொடர்பில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO)மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் முறையிடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க சம்மேளனத்தின் இணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களை கொழும்பிற்கு அழைத்து மகா சபையினை கூட்டுவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வேதனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 17 சுகாதார சேவை தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நேற்றைய நிறைவேற்றுக் குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, பணிப்புறக்கணிப்பில் ஆரம்பத்தில் ஈடுபட்டிருந்த அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கம் நேற்று முன்தினம் இந்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் இருந்து விலகியிருந்தது.

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அதன் தலைவர் சமன் ரத்னப்ரிய தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், பணிப்புறக்கணிப்பினை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வதா? இல்லையா? என்பது குறித்து இன்றைய தினம் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என சுகாதார தொழிற்சங்க சம்மேளனத்தின் இணைப்பாளர் ரவி குமுதேஷ் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button