ஐவின்ஸ் தமிழ் இணையதளம் நடத்திய பதாதை தயாரிப்பு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இலத்திரனியல் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
எமது இணைய தளம், தரம் 6 மாணவர்களுக்கு மிகக்குறைந்த கட்டண அடிப்படையில் வகுப்புகளை நடத்தி வருகிறது.
இந்த வகுப்பில், 100க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கு பற்றிவருகின்றனர்.
குறித்த மாணவர்களுக்கு world earth day யை முன்னிட்டு ஆங்கில பாடத்தில் பதாதைகள் தயாரிக்கும் போட்டி நடாத்தப்பட்டது.
அதில், மிகச்சிறந்த பதாதைகளைத் தயாரித்த எட்டு மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இந்த மாணவர்கள் வீட்டில் இருந்தவாறே சான்றிதழ்களைப் பிரதி எடுக்க கூடிய வகையில் சான்றிதழ்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
பூமி சார்ந்த பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வினை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் இப்போட்டி நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.