இலங்கைசெய்திகள்

மண்முனை. தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட விளையாட்டு வீரர்களைக் கௌரவிக்கும் வர்ணவிழா!!

Color Festival

மட்டக்களப்பு மாவட்;டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திலிருந்து பிரதேச மட்டம் முதல் தேசிய மட்டம் வரை விளையாட்டுத்துறையில் சகல பிரிவுகளிலுமிருந்து சாதனை படைத்த வீரர்களை வர்ண விழா (colours – 2021) எனும் கருப்பொருளின்கீழ் கௌரவிக்கும் நிகழ்வு செவ்வாய்கிழமை (25) மாலை களுவாதளை கலசார மண்டபத்தில் நடைபெற்றது.

2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் கடந்த 10வருடத்திற்குள் தேசிய மட்டத்தில் சாதனை நிலை நாட்டியவர்களுக்கும் இக்கௌரவரம் வழங்கப்பட்டுள்ளது.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசெயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன், மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி எஸ்.ஸ்ரீகாந்த், மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர்(காணி) திருமதி என்.முகுந்தன் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், விளையாட்டு உத்தியோகஸ்த்தர்கள், விளையாட்டுப்பயிற்றுவிப்பாளர்கள், விளையாட்டுத்துறையில் சாதனை படைத்த வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவில் இருந்து பாடசாலைமட்டம், இளைஞர் சேவைகள் மன்றம், விளையாட்டு அமைச்சு உள்ளிட்ட பல பகுதிகளிலுமிருந்து பங்குபற்றி விளையாட்டுக்களில் வெற்றிபெற்று பிரதேசத்திற்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த விளையாட்டு வீர வீராங்கனைகள் வர்ண விழா (colours – 2021) எனும் கருப் பொருளின்கீழ் பிரதேச செயலகத்தினால் வெற்றிக் கேடயங்கள், சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதோடு அவர்களின் வெற்றிக்கு காரணகர்த்தாவாக விளங்கிய பயிற்றுவிப்பாளர்களும் இதன்போது பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் விளையாட்டுக்கள் தொடர்பான வர்ணங்கள் எனும் நூல் ஒன்றும் பிரதேச செயலக்தினால் வெளியிட்டு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

செய்தியாளர் – சக்தி

Related Articles

Leave a Reply

Back to top button