நாளை ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்த பின்னர் ஜனாதிபதி செயலகத்தையும் அலரிமாளிகையையும் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கவேண்டும் என ஓமல்பே சோபித தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜனாதிபதி பதவி விலகிய பின்னர் அந்த கட்டிடங்களை படையினரிடம் ஒப்படைக்காவிட்டால் அதனால் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படும் பல அரசியல் சதிமுயற்சிகளிற்கு வழிவகுக்கும் எனவும் இந்தக் கைப்பற்றலை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களிற்கான வெற்றியாகக் கருதவேண்டும் எனவும் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.