ஜனாதிபதி மாளிகை முற்றுகை
அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஜனாதிபதி மாளிகையை நோக்கி முன்னேறும் முயற்சியை தடுப்பதற்காக பொலிஸார் தொடர்ச்சியாக கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டு வந் போதிலும் பொலிசாரின் அனைத்து தடைகளையும் தாண்டி தகர்த்தெரிந்து ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டுள்ளனர்
இதனால் பொலிசாருக்கும் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலைமை அது தற்போது கொழும்பு சத்தம் வீதி பிரதேசத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி இன்று நாடு முழுவதும் பாரிய எதிர்ப்பு போராட்டம் இடம்பெற்று வருகிறது. பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், புத்திஜீவிகள், ஆசிரியர் சமூகத்தினர், அரச உத்தியோகத்தர்கள், தொழிற்சங்கத்தினர், அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் திரண்டு இந்த போராட்டத்தில் பங்கேற்று இருக்கின்றனர்
இந்நிலையில் அனைத்து பகுதிகளிலிருந்தும் கொழும்பை நோக்கி வாகனங்களிலும் ரயில்களிலும் கால்நடையாகவும் படையெடுத்தும் வருகின்றனர்.
ரயில்களிலும் பஸ்களிலும் கோட்டா கோ ஹோம் என்ற பதாகையை வெளிப்படுத்தியுள்ள பொதுமக்கள் நடை பவனியின் போதும் கோட்டா கோ ஹோம் என்ற வார்த்தையை உச்சரித்து பெரும் கோஷம் எழுப்பி வருகின்றனர்.
இதேவேளை காலி மைதானத்தில் இடம்பெறுகின்ற அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சற்று முன்னர் ஆரம்பித்திருந்த நிலையில் அங்கு மைதானத்தை சுற்றி காலி மாவட்ட மக்கள் பெரும் திரளாக திரண்டு அரசாங்கத்துக்கு எதிராக போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். அதே நேரம் ஆகும் என்ற கோஷத்தை ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றனர்.
இது இவ்வாறு இருக்க தலைநகர் தற்போது ஸ்தம்பித்த நிலையை அடைந்திருக்கிறது வாகனப் போக்குவரத்து பொதுப்போக்குவரத்து என்று எதுவுமில்லை. மக்களும் எந்த விதமான பயணங்களையும் மேற்கொண்டிருக்கவில்லை. அனைத்து வர்த்தக நிலையங்களும் சந்தைகளும் காய்கறிக் கடைகளும் மூடப்பட்டிருக்கின்றன. இதனால் பொதுவான இயல்பு நிலை முற்றாக பாதிக்கப்பட்டிருக்கிறது. தலைநகர் இன்றைய தினத்தில் போராட்டக் களமாக மாறியிருக்கிறது.