
நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தலைமையில் கொழும்பு கோட்டை பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வந்த பாரிய போராட்டத்தில் பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.சம்பவ இடத்தில் அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பொலிசார், வீதித் தடைகளை அமைத்து பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
எனினும் வீதித்தடைகள் மீது ஏறி நின்று கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.