தற்காலிகமாக ஐந்து நாட்களுக்கு கொழும்பு பங்குச்சந்தை பூட்டப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான நிலையைக் கருத்தில் கொண்டு எதிர்வரும் 18ம் திகதி முதல் ஐந்து நாட்களுக்கு கொழும்பு பங்குச்சந்தை மூடப்படும் என பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு அறிவித்துள்ளது.