இன்றைய தினம் கொழும்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஏ.எஸ்.ஜே. சந்திரகுமார தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் ஆர்ப்பாட்டக்காரர்களினால் முன்னெடுக்கப்பட உள்ள போராட்டத்தின் போது பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கில் கொழும்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும்
இந்த விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு அமைய ட்ரோன் கமராக்கள், பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர், கலகத் தடுப்பு பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஆகியோரின் உதவி பெற்றுக்கொள்ளப்பட உள்ளது எனவும் கூறப்படுகின்றது.
இந்தப் போராட்டத்தின் போது வன்முறைகள் இடம்பெற்றால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.