ஒருவரின் சரும பளபளப்பிற்கு கொலாஜனே முக்கிய காரணம். இது சருமங்களில் மட்டுமல்லாமல் எலும்பு, மூட்டுகள், ரத்த குழாய்கள் , செரிமானப் பாதையிலும் உற்பத்தியாகிறது.கொலாஜன் நம் சரும ஆரோக்கியத்திற்கு அவசியமான ஒரு புரதமாகும்.
கொலாஜன் உற்பத்தி நம் உடலில் சீராக இருக்கும்பட்சத்தில் சருமத்தில் சுருக்கங்கள் முதுமைத் தோற்றம் போன்றவை இருக்காது.
கொலாஜன் சருமத்தை மிருதுவாகவும் அழகாகவும் ஈரப்பதத்துடனும் இறுக்கமாகவும் வைக்க உதவுகிறது.
கொலாஜன் உற்பத்தி அளவு குறையும்போது தோலில் சுருக்கங்கள் தொய்வுகள் நெற்றி மற்றும் கண்களை சுற்றி சிறு சிறு கோடுகள் தோன்ற ஆரம்பிக்கும்.
ஃபேஷியல் மசாஜ்கள் மாய்ஸ்ச்சுரைசர்கள் சன் ஸ்க்ரீன் லோஷன் போன்றவற்றினாலும் குறிப்பிட்ட அளவு கொலாஜன் உற்பத்தி ஆகும். வைட்டமின் சி க்ரீம்கள் மற்றும் ரெட்டினால் இருக்கும் க்ரீம்கள் போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் 15லிருந்து 20 சதவீதம் வரை கொலாஜன் உற்பத்தி அதிகரிக்கும். இது தவிர கொலாஜன் உற்பத்தி அதிகரிக்க மாத்திரைகளும் பரிந்துரைக்கப்படுகின்றன.
பச்சைக் காய்கறிகள், கீரைகள், ப்ரக்கோலி, குடைமிளகாய் ,தக்காளி பூண்டு போன்றவற்றிலும் விற்றமின் சி மிகுந்துள்ள சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு லெமன் ஸ்ட்ராபெர்ரி ப்ளூபெர்ரி கொய்யா போன்ற பழ வகைகளையும் தொடர்ந்து உட்கொள்ளும்போது கொலாஜன் உற்பத்தி அதிகரிக்கும். இதுதவிர அசைவ உணவில் முட்டையின் வெள்ளைக்கரு மீன் வகைகள் சிப்பி மீன் வகைகள் போன்றவையும் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும். மிக பழமையான மற்றும் அனைவரும் அறிந்த ஆட்டுக்கால் சூப் போன்றவற்றிலும் கொலாஜன் உற்பத்தி மிகுதியாக இருக்கும்.
ழூ சர்க்கரைஇ சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகளான அரிசிஇ மைதா, இனிப்பு வகைகள் போன்றவற்றை தொடர்ந்து உண்ணும்போது உடலில் கொலாஜன் உற்பத்தி அளவு குறையும்.