உலகம்செய்திகள்

‘கோலா கரடிகள்’ அழிந்துவரும் விலங்கினங்களின் பட்டியலில்!!

கோலா கரடி என அழைக்கப்படும் ஒரு வகை மிருக இனம் அருகிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

அவுஸ்திரேலியாவின் கிழக்கு கரையோர பகுதியில் காணப்படும் இந்த மிருகம் அழிந்து வரும் இனமாக பட்டியல் இடப்பட்டுள்ளது.

குவீன்ஸ்லாந்து, நியூ சவுத் வேல்ஸ் மற்றும் அவுஸ்திரேலிய தலைநகர் பிரதேசங்களில் அதிக எண்ணிக்கையில் இருந்த இந்த கோலா கரடி, காட்டுதீ, வரட்சி, நோய், காலநிலை மாற்றம் மற்றும் காட்டு பிரதேசங்கள் அழிக்கப்படுவதன் காரணமாக பாரிய அளவில் அருகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற காட்டு தீ காரணமாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோலா கரடிகள் பலியாகின.

இந்த நிலை தொடருமானால் எதிர்வரும் 2050 ஆம் ஆண்டளவில் இந்த இனம் முற்றாக அழிந்து விடும் என அவுஸ்திரேலிய சுற்றுச் சூழல் அமைச்சர் சுசான் லே எச்சரித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button