54 சீன செயலிகளுக்கு தடைவிதிப்பதற்கான முயற்சிகளை இந்தியா மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து பியூட்டி கெமரா உள்ளிட்ட 54 சீன செயலிகளுக்கு இவ்வாறு தடைவிதிக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 2020 ஆம் ஆண்டு இந்திய மற்றும் சீன இராணுவத்தினருக்கு இடையில் லடாக் பகுதியில் மோதல் ஏற்பட்டிருந்தது.
இதில் 20 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
குறித்த மோதலை தொடர்ந்து டிக்டொக் உள்ளிட்ட 58 சீன செயலிகளுக்கு இந்தியா முன்னதாக தடை விதித்திருந்தது.
இதன்படி, மேலும் 54 சீன செயலிகளுக்கும் தடை விதிப்பது தொடர்பான அதிகாரபூர்வ தகவலை இந்திய அரசாங்கம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.