பயங்கரவாதத்திற்கு பின்னரான காலப்பகுதியில் வடபகுதியில் சீனா முன்னெடுத்துள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளால் இந்தியாவிற்கு எந்த தீமையும் ஏற்படாது என இலங்கைக்கான சீன தூதுவர் கிய் சென் ஹொங் தெரிவித்துள்ளார்.
வடபகுதியில் சீனாவின் நடவடிக்கைகளால் இந்தியாவிற்கு ஆபத்து என தெரிவிக்கப்படுவது அர்த்தமற்ற விடயம் என தூதுவர் தெரிவித்தார் என சண்டே ஒப்சேவர் செய்தி வெளியிட்டுள்ளது.
சீனாவும் இந்தியாவும் அயலவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் உள்நோக்கம் கொண்ட தமிழ் அரசியல்வாதிகள் சீனாவால் இந்தியாவிற்கு ஆபத்து என தெரிவித்து அச்சத்தை உருவாக்க முயல்கின்றனர் ஆனால் நாங்கள் அயலவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வடபகுதி தீவுகளில் சூரியசக்தி மற்றும் காற்றாலைகளை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ள தூதுவர் அந்த திட்டத்தை இன்னமும் கைவிடவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply