சீனாவில் 20 – 24 வயதுக்கு இடைப்பட்டவர்களின் வேலையின்மை 20 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச தகவல்களின் படி 16 – 24 இடைப்பட்ட வயதுடைய இளைஞர்களின் வேலையின்மை 14 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
அவர்களில் பெரும்பாலானவர்கள் இளம் பட்டதாரிகள் என்பதுடன், தனியார் பிரிவுகளில் தொழில்களை தேர்வு செய்வதற்கு பதிலாக சிவில் சேவைகள், ஆசிரிய சேவைகளில் அதிக ஆர்வம் காட்டிவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது சீனாவின் இளைஞர்களிடையே திருமண வயது அதிகரிப்பு, பிறப்பு விகிதம் குறைதல் மற்றும் புதிய வீடுகளுக்கான தேவைப்பாடு குறைதல் உள்ளிட்ட பல பொருளாதார, சமூக மற்றும் மக்கள் தொகை பிரச்சினைகளுக்கு வழிவகுத்துள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.