உலகம்செய்திகள்

இரும்பு பெட்டிக்குள் கொவிட் தொற்றாளர்கள் – சீனாவில் நடைமுறை!!

china

சீனா நாட்டில் உகானில் இருந்து பரவியதாக கூறப்படும் கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இன்றைய நிலவரப்படி, 31 கோடி மக்களுக்கும் மேல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களை இரும்பு பெட்டிகளில் அந்நாட்டு அரசு அடைத்து வைப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக வரிசையாக இரும்பு பெட்டிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சீனாவின் பெய்ஜிங் மாகாணத்தில் அடுத்த மாதம் குளிர்கால ஒலிம்பிக் தொடர் நடைபெறவுள்ளது.

இதையடுத்து ’பூஜ்ஜிய கொரோனா’ என்ற கொள்கை அடிப்படையில், கொரோனாவை ஒழிக்க இலட்சக்கணக்கான மக்களை அந்நாட்டு அரசாங்கம் தனிமைப்படுத்தி வைத்துள்ளது.

கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் அனைவரும் ஒரு படுக்கை, கழிப்பறை மட்டுமே உள்ள இரும்பு பெட்டிகளில் அடைத்து வைத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சீனாவில் யாராவது ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டால் கூட அந்த பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் அழைத்து வரப்பட்டு இவ்வாறு இரும்பு பெட்டிகளில் 2 வாரம்வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button