சீன கப்பலில் உள்ள விஞ்ஞான ஆய்வுகளைப் பார்வையிடுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்வதாக சீன தூதரக வெளிவிவகார அமைச்சர் கேட்டுள்ளார்.
இந்த கோரிக்கைக்கு பதிலளித்துள்ள சீன வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர், வாங் வென்பின், பீய்ஜிங் பாதுகாப்பு பிரச்சினைகளை மேற்கோள்காட்டி இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பது அர்த்தமற்றது, என்று கூறியுள்ளார். இலங்கை ஒரு இறையாண்மை கொண்ட நாடு.
அது தனது சொந்த வளர்ச்சி நலன்களுக்காக ஏனைய நாடுகளுடன் உறவுகளை வளர்க்க முடியும், என்றும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் சீனாவும், இலங்கையும் மூன்றாம் நாடுகளை இலக்கு வைக்காமல் தமது இரண்டு நாடுகளிடையே பொதுவான விடயங்களைச் சுதந்திரமாகத் தெரிவு செய்கின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வழமையான சூழ்நிலையில், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பரிமாற்றங்கள் தொடர்பில் பிறப்பிக்கப்படும் தடை நிறுத்தப்பட வேண்டும் என சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சாவோ லிஜியன் தெரிவித்துள்ளார்.