இலங்கைசெய்திகள்

சிசுவின் சடலம் மீட்பு – பூண்டுலோயா ஆடைத் தொழிற்சாலை மலசலகூடத்திலிருந்து!!

child death

பூண்டுலோயா – நியங்கந்தர பிரதேசத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றின் மலசலகூடத்திலிருந்து சிசுவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினருக்கு நேற்று (29) கிடைத்த தகவலுக்கு அமைய, ஆடைத்தொழிற்சாலையின் பின்புறத்தில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் 23 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button