இந்தியாசெய்திகள்முக்கிய செய்திகள்

சந்திராயன் – 3 வெற்றிகரமாக விண்ணுக்குப் பறந்தது!!

Chandrayaan





இந்தியாவின் வரலாற்று முக்கிய நிகழ்வாக சந்திரயான்-3 விண்கலத்தைச் சுமந்து கொண்டு எல்விஎம்-3 ஏவுகணை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஆய்வு மையத்தின் இரண்டாவது தளத்திலிருந்து நேற்றைய தினம் சரியாக பிற்பகல் 2.35 மணிக்கு விண்கலத்தைச் சுமந்தபடி விண்ணில் பாய்ந்தது.

சந்திரயான் விண்கலத்தைச் சுமந்துகொண்டுச் சென்ற எல். பி.எம் 3- எம். 4 ஏவுகணையின் இரண்டு அடுக்குகளும் திட்டமிட்டபடி வெற்றிகரமாக பிரிந்த நிலையில், தற்போது மூன்றாவது அடுக்கும் வெற்றிகரமாக பிரிந்துவிட்டது.

பிறகு வெற்றிகரமாகப் பயணித்து பூமியிலிருந்து 179 கி.மீ. தொலைவில், நீள் வட்டப்பாதையில் சந்திரயான் – 3 விண்கலம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

அதற்கான 25.30 மணி நேர கவுன்ட் டவுன் வியாழக்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு தொடங்கியது. எரிபொருள் நிரப்பும் பணிகளும், இறுதிக்கட்டப் பணிகளும் நிறைவடைந்த நிலையில், சந்திரயான்-3 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான கண்காணிப்பு நடவடிக்கைகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்டு வந்தனர்.

அமெரிக்கா, ரஷ்யா, சீனாவை தொடா்ந்து இந்தியா மூன்றாவது முறையாக நிலவை ஆய்வு செய்ய முன்னெடுத்துள்ள இந்த முயற்சி, உலக நாடுகளின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈா்த்துள்ளது.

சந்திரயான்-3 திட்டம் செயல்படுத்தப்படுவதை நேரில் காண்பதற்காக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ஜிதேந்திர சிங் சென்னைக்கு வியாழக்கிழமை வந்திருந்தார். அங்கிருந்து ஸ்ரீஹரிகோட்டாவுக்கு வெள்ளிக்கிழமை சென்று ஏவுகணை ஏவுதலை நேரில் பாா்வையிட்டார்.

மற்றொரு புறம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஏவுகணை ஏவுதல் நிகழ்ச்சியை இஸ்ரோ தளத்தில் முன்பதிவு செய்து நேரடியாக பார்த்தனர்.

நிலவின் தென்துருவம்: சந்திரயான்-3 திட்டத்தை ரூ.615 கோடியில் இஸ்ரோ வடிவமைத்துள்ளது. நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக மொத்தம் 3,895 கிலோ எடையில் வடிவமைக்கப்பட்ட சந்திரயான் -3 விண்கலத்துடன் உந்து கலன் (ப்ரபல்சன் மாட்யூல்), லேண்டா் மற்றும் ரோவா் கலன்கள் பயணிக்கின்றன.

Related Articles

Leave a Reply

Back to top button