இலங்கைசெய்திகள்

மத்தியின் ஆசிரியைக்கு உயர் கெளரவம் – வைரலாகும் பாடல் காணொளி!!

ceremony

வைரலாகும் பாடல்

“ யாழ். மத்திய கல்லூரியைச் சேர்ந்த யாழ் பிரபல பொருளியல் ஆசிரியர் செல்வி தனலக்ஷ்மி புண்ணியமூர்த்தி ஒய்வு பெறுகிறார் என்னும் செய்தியை கடந்த வெள்ளிக்கிழமை எமது இணையதளத்தில் பிரசுரித்திருந்தோம்.
இந்தச் செய்தி அறிந்த பழைய மாணவர்கள் பலரும் அவரது இல்லத்திற்குச் சென்றுள்ளனர். 04.12.2021 நேற்று மாணவர் பட்டாளமும் ஆசிரிய பட்டாளமும் சேர்ந்து 35 வருட ஆசிரியப் பணியை நிறைவு செய்த அவரை மகிழ்வுடன் கொண்டாடி வாழ்த்தியுள்ளனர்.

ஆசிரியரின் கற்பித்தல் பணியின் சிறப்பினை கவிதை வரிகளாக்கி றொகான் ஆசிரியரின் வழிகாட்டலில் பாடலாக்கி மெட்டமைத்து அதனை மாணவர்கள் ஆசிரியர்கள் அனைவரும் சேர்ந்து பாடி அவருக்கு இசையால் மகுடம் சூட்டியுள்ளனர்.

இந்தக் காட்சியும் பாடலும் தற்போது வைரலாகி வருகிறது .இந்த பாடலின் வீடியோ இணைப்பு – பாடலின் தெளிவான ஓடியோ இணைப்பும்
மாணவர் ஆசிரியர் சமூகத்திற்காக இங்கே பதிவிடப்படுகிறது .
இந்த ஆசிரியையின் கல்வி பணியை ஐவினஸ் இணையதளமும் பாராட்டுகிறது

Related Articles

Leave a Reply

Back to top button