தொடரும் சீமெந்துத் தட்டுப்பாடு.
சீமெந்து பொதியளவு கிடைக்காமையினால் கட்டட நிர்மானங்கள் இடைநடுவில் நிற்பதை காணமுடிகிறது. சீமெந்து தட்டுப்பாடு நிலவுகிறது என்பதை வெளிப்படையாகக் காண்பிப்பதில் சில சீமெந்து முகவர்களே ஏற்படுத்தி வருகின்றனர். இதனைப்பயன்படுத்தி சில முகவர்கள் தட்டுப்பாட்டை காரணமாக்கி வெளியில் அதிகூடிய விலையில் சீமெந்தினை விற்பனை செய்கின்றனர்.
குறிப்பாக கிழக்கில் ஒரு பக்கட் சீமெந்து 1450|=வுக்குமேல் விற்பனை செய்யப்படுகிறது. முகவர்களிடம் இல்லை என்பதாலும் , தமக்குத் தேவையான சீமெந்தை என்ன விலைகொடுத்தாவது கொள்வனவு செய்ய வேண்டும் என்பதாலும் பொதுமக்கள் சிலர் அதிகவிலைக்கு வாங்குகின்றனர். ஆனால் சாதாரண பொதுமக்கள் சீமெந்தைத் தேடி அலைகின்றனர். ஏதோ போதைவஸ்து பொருளைப்போன்று மறைத்துவைத்து சீமெந்தை இவர்கள் விற்பனை செய்கின்றனர்.
முகவர்களிடம் 1098/= வுக்கு வாங்கவேண்டிய இந்தச் சீமெந்தை அதேமுகவர்கள் யாருக்கும் தெரியாமல் இரகசியமான முறையில் விற்பனை செய்கின்றனர். சில சந்தர்ப்பங்களில் நுகர்வோர் அதிகார சபை ஊழியர்கள் விலை கூடுதலாக விற்பவர்களை கைதுசெய்த போதிலும் அவர்கள் ஏதோசாக்குப்போக்குகள் கூறி தப்பித்து விடுகின்றனர். இந்தச் செயற்பாட்டை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் அரசு போதியளவு சீமெந்தை வினியோகம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மக்கள் கோரிக்கை விடுப்பதுடன் கள்ளத தனமாக விற்பனை செய்யும் முகவர்களையும், வியாபாரிகளையும் கண்டறிந்து சட்டநடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் மக்கள் வேண்டுகின்றனர்.