இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
“பரிசு கொடுக்கிறோம்” என்ற பெயரில் செய்யப்படும் மோசமான செயற்பாடு!!
Cash

அண்மையில் சப்ரைஸ் கிப்ற் என்ற பெயரில் நடக்கும் மோசமான நடவடிக்கை குறித்து மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
மேற்படி பரிசளிப்பதாக கூறி காசுத்தாள்களை மடக்கி பூவடிவமாகச் சுருக்கி பரிசளிக்கும் ஒரு கலாசாரம் பெருகியுள்ளது.
இதனால் பணத்தாள்களில் ஏற்படும் மடிப்புகள் காரணமாக பல அசௌகரியங்கள் ஏற்படுகின்றன.
இயந்திரங்களில் இந்தப் பணத்தாள்களை வைப்புச் செய்யும் போது அதிக நேர விரயம் ஏற்படுவதுடன் இது சட்டப்படியான குற்றமும் ஆகும். எனவே மக்கள் இவ்விடயத்தை கவனத்தில் எடுக்குமாறு சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.