பொருட் கொள்வனவின் போது கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது! – நீதி அமைச்சு
பொருட் கொள்வனவின் போது கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது என நீதி அமைச்சின் ஆலோசகர் ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர்.டி சில்வா தெரிவித்துள்ளார்.
சதொச நிறுவனத்தில் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்யும் போது வேறும் சில பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டுமென்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பொருட் கொள்வனவின் போது நிபந்தனைகள் விதிக்கப்பட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக அரசாங்க நிறுவனமொன்றில் இவ்வாறு பொருட்கள் கொள்வனவு செய்ய நிபந்தனைகள் எதனையும் விதிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு நிபந்தனை விதிப்பது சட்டத்திற்கு முரணானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் 11ம் சரத்தின் அடிப்படையில் இவ்வாறு பொருட்களை கொள்வனவு செய்ய நிபந்தனைகள் விதிக்கப்பட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு முறைப்பாடு செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
சதொச நிறுவனத்தில் சீனி மற்றும் நாடு அரிசி பேர்ற பொருட்கனை கொள்வனவு செய்வதற்கு மேலும் சில பொருட்கள் கொள்வனவு செய்ய வேண்டுமென்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிபந்தனை தொடர்பில் நீதி அமைச்சின் ஆலோசகர் சட்டத்தரணி யூ.ஆர்.டி சில்வா தனது நிலைப்பாட்டை இவ்வாறு வெளியிட்டுள்ளார்.