செய்திகள்புலச்செய்திகள்

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் சகோதரிகளுக்கு கொட்டும் பாராட்டு!!

Canada

கனடாவில்,  குழந்தைகளுக்கான மருத்துவ அறிவியல் புத்தகங்களை எழுதிவரும் இலங்கைத் தமிழ் வம்சாவளி சகோதரிகள் பலரது பாராட்டையும் பெற்று வருகின்றனர். 

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் பிராம்ப்டன் பகுதியில் வசிக்கும் இலங்கை வம்சாவளித்  தமிழர்களான சுரபி அன்பழகன்  மற்றும் ஸ்வாதி அன்பழகன் ஆகியோரே இந்தப் பாராட்டைப் பெறுகின்றனர். 

19 வயதாகும் இவர்கள், இந்த இலையுதிர்காலத்தில் வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் மருத்துவ அறிவியல் படிப்பதற்காக இரண்டாம் ஆண்டில் நுழைகின்றனர். அவர்கள் தங்கள் ஓய்வு நேரத்தில் புத்தகங்களை எழுதுகிறார்கள்.

எழுத்து மற்றும் மருத்துவ அறிவியல் இரண்டின் மீதான தங்கள் காதலை குழந்தைகளுக்கான புத்தகங்கள் மூலமாக வெளிப்படுத்திவருகின்றனர். பிராம்ப்டனில் கோவிட் தொற்று கடுமையாக தாக்கியபோது கடந்த கோடை மாதங்களில் ஒரு தடுப்பூசி கிளினிக்கில் தன்னார்வலர்களான இருவரும் பணியாற்றியுள்ளனர்.

கனடா வாழ் இரட்டைச் சகோதரிகளான இவர்கள்,  குழந்தைகளுக்கான மருத்துவ அறிவியல் புத்தகங்களை எழுதும் அசாதாரணமான வேலையைச் செய்து வருகின்றனர். அவர்கள் இப்போது புதிதாக தடுப்பூசிகள், உடல்நலம் மற்றும் பன்முகத்தன்மை பற்றிய குழந்தைகளுக்கான புத்தகங்களை எழுதுகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button