இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
இலங்கையின் மனித உரிமை மீறல் குறித்து நால்வருக்குத் தடை விதித்தது கனடா!!
Canada

இலங்கையில் இடம்பெற்ற ஆயுதப் போரின் போது மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பான நான்கு இலங்கை அரச அதிகாரிகளுக்கு கனடா தடை விதித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ, சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க, லெப்டினன் கேணல் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி ஆகியோருக்கு கனடா தடை விதித்துள்ளதாக கனேடிய வெளிவிகார அமைச்சு, இன்று (10) அறிவித்துள்ளது.