இலங்கைசெய்திகள்

இலங்கையில் படையினரால் நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் குறித்து கவனம் செலுத்தியுள்ளோம் – பிரித்தானியா!!

Britain

இலங்கையில் படையினரால் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைகள் மற்றும் சித்திரவதைகள் குறித்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அவதானம் செலுத்தியிருப்பதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் நிலைவரத்தைக் கண்காணிப்பதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளது.

பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் டொனியா அன்டோனியஸியினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்திற்குப் பொறுப்பான அமைச்சர் அமன்டா மில்லிங், இதனை கூறினார்.

Related Articles

Leave a Reply

Back to top button