பாணின் விலை உயர்ந்துள்ள நிலையில், சில பேக்கரி உரிமையாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட எடைக்குக் குறைவான பாணை 190 ரூபாய்க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் சில பேக்கரி உரிமையாளர்கள் ஒரு பாணின் எடையை 300 அல்லது 350 கிராம் வரை குறைத்து 190 ரூபாய்க்கு விற்பனை செய்வதாக அதன் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார்.