செய்திகள்புலச்செய்திகள்
முதுபெரும் படைப்பாளர் திரு. கிருஷ்ணசிங்கம் நமசிவாயம் அவர்களின் சிறுகதை நூல் வெளியீடு!!
Book Loange

ஈழத்து இலக்கிய வரலாற்றில் முதுபெரும் படைப்பாளியான திரு. கிருஷ்ணசிங்கம் நமசிவாயம் அவர்களின் 5வது சிறுகதைத் தொகுப்பான பூங்கொத்து என்னும் சிறுகதை நூல் நோர்வே ஒஸ்லோ நகரில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது,


தனது 85 வயது பிறந்த தினத்தினை முன்னிட்டு அவர் இந்தப் படைப்பின் வெளியீடு செய்துள்ளார்.

முன்னைய காலங்களில் இவரது எழுத்தாக்கத்தில் வெளிவந்த “செவ்வரத்தம் பூ” சிறுகதை, குறும்படமாக வெளியீடு கண்டது. அன்றைய காலங்களில் இக்குறும்படம் பெரும் எழுச்சியையும்,பாசப்பிணைப்பிணையும் ஏற்படுத்தியது எனலாம்.

இவரது பூங்கொத்து பனுவல் எமது தேசத்தின் அவலங்களைச் சுமந்து வெளிவந்திருக்கிறது.

இவர் நடிகர், நாடக ஆசிரியர், சமூக மற்றும் அரசியல் ஆர்வலர் எனப்பன்முகத்தன்மை கொண்ட ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.











தகவல் – பிரபா அன்பு