13 . 12. 2021 இன்றைய தினம் கம்பிகளின் மொழி பிரேம் அவர்கள் எழுதிய பொன்னான பரிசு நூல் வெளியீடு கண்டுள்ளது. மன்னார் அடம்பன் பகுதியிலுள்ள எங்கட மண்டபம் மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு செம்மொழிக் குரலோன் திரு. செல்லப்பா நாகேந்திரராசா அவர்கள் தலைமை தாங்கினார்.
திரு. வினோ நாகராதலிங்கம் [வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்] திரு. தர்மலிங்கம் முகுந்தன் [வலயக்கல்விப் பணிப்பாளர் – மடு] ஐ. எம். சுரைஸ் [பணிப்பாளர் – அறிவிருட்ஷம் துரித கல்வி சமூகமேம்பாடு] ம. கௌரிபாலன் [சமூகசேவையாளர்] ஏ.ஆர் றிஷானா ரஹீம் [பன்னூலாசிரியர் ஆசிரியை -புத்தளம் ஸாஹீரா தேசியகல்லூரி] ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் முன்னதாக மங்கல விளக்கேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து தலைமை உரை இடம்பெற்றது. வாழ்த்துரைகளை திருமதி மதுஷா, திருமதி கோபிகை ஆகியோர் வழங்கினர். அடுத்து நூல் வெளியீடு இடம்பெற்று நூல் மதிப்பீட்டுரையை, we can மாந்தை மேற்கு மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் வெற்றிச்செல்வி சசிகலா நிகழ்த்தினார். இவரது உரையைத் தொடர்ந்து நூல் வெளியீட்டிற்கு உதவி புரிந்தோரைக் கௌரவிக்கும் முகமாக நினைவுச்சின்னங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து பிரதம விருந்தினர் உரையை திரு. வினோ நாகராதலிங்கம் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நிகழ்த்தினார்.
இறுதி நிகழ்வாக நூலாசிரியரின் ஏற்புரையும் நன்றியுரையும் இடம்பெற்று நிகழ்வு இனிதே நிறைவுற்றது.