இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
யாழ். நூலக ஏற்பாட்டில் இடம்பெற்ற புத்தக கண்காட்சியும் பேரணியும்!!
Jaffna library

தேசிய வாசிப்பு மாதம் ஒக்டோபர் 2023 ஐ முன்னிட்டு 17.11.2023 வெள்ளிக்கிழமை அன்று யாழ்ப்பாண நூலக ஏற்பாட்டில் யாழ்.மத்திய கல்லூரிச் சமூகத்தினர் ஒன்றணைந்து விழிப்புணர்வு பேரணி ஒன்றினை நடாத்தியுள்ளனர்.



நூலகத்தில் நடைபெறும் கல்விக் கண்காட்சியின் மூன்றாம் நாளான இன்று, யாழ். நகர்ப் பகுதியில் இப்பேரணி இடம்பெற்றுள்ளது.


பிரதம நூலகர் தலைமையில் நடைபெற்ற பேரணியில் ஊர்வலமாக வந்த மாணவர்கள், நூலக வாயிலில் வாசிப்பு குறித்த தமது கருத்துகளையும் தெரிவித்து பின்னர் கண்காட்சியைப் பார்வையிட்டனர்.


மிகவும் ஆக்கபூர்வமானதாகவும் பிரயோசமானதாகவும் இக் கண்காட்சி அமைந்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.




