Breaking Newsஇலங்கைசெய்திகள்
யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடி ஏற்றி சுதந்திர தினம் புறக்கணிப்பு!!
Black day

இலங்கையில் 75வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் , யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சுதந்திர தினத்தை கரி நாளாக நினைவு கூரும் முகமாக கறுப்பு கொடி ஏற்றிய சம்பவம் இடம் பெற்றுள்ளது.
சுதந்திர தினத்தை தமிழர் பிரதேசங்களில் கரி நாளாகக் கொண்டாடுமாறு அரசியல், கட்சிகள் பொது அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கொடிகம்பத்தில் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.
தீர்வு காணப்படாத தமிழர் பிரச்சினைகள் முடிவுக்கு வராமையினாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிகின்றனர்.