இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

பிறப்புச் சான்றிதழில் தேசிய அடையாள அட்டை இலக்கம் இணைப்பு!!

Birth certificate

பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் தேசிய அடையாள அட்டை இலக்கம் இணைக்கும் நடைமுறை இன்று முதல் ஆரம்பமாகவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவாளர் நாயகம் அலுவலகத்தினால் வழங்கப்படும் பிறப்பு அத்தாட்சி பத்திரத்தில் ஆட்பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்படும் தேசிய அடையாள அட்டை இலக்கம் உள்ளீடு செய்யப்படவுள்ளது.

2021 டிசம்பர் 14 இல் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்திற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. இரு திணைக்களங்களுக்குமிடையே இணையம் மூலம் தகவல்கள் பரிமாறப்படும் எனவும் இவ்வாறு தகவல்களை ஒரே இலக்கத்தின் கீழ் பெற முடிவது அனைத்து பணிகளையும் இலகுவாக்க உதவியாக அமையும் என கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Back to top button