செய்திகள்தொழில்நுட்பம்

பெயர் மாற்றம் செய்த பெரு நிறுவனங்கள் சிலவற்றின் விபரம்!!

Big companies that changed their name

Facebook நிறுவனம் அதன் பெயரை Meta என மாற்றியுள்ளது.
மெய்நிகர்த் தொழில்நுட்பத்தில் கூடுதல் கவனம் செலுத்தும் நிலையைப் புதிய பெயர் பிரதிபலிப்பதாகக் கூறப்பட்டது.

Nissan நிறுவனத்துக்குக்கீழ் செயல்பட்ட Datsun கார் தனிமுத்திரை 1981-ஆம் ஆண்டில் நீக்கப்பட்டது.

நிறுவனத்தின் உலகளாவிய கண்ணோட்டத்தை ஒருங்கிணைக்க, பெயர் Datsun-இலிருந்து Nissan-க்கு மாற்றப்பட்டது.

google 2015-ஆம் ஆண்டில் கூகிள், அதன் பெயரை Alphabet-க்கு மாற்றியது.

அதன் வெவ்வேறு சேவைகளையும் வர்த்தகங்களையும் ஒரே பெயரின்கீழ் கொண்டுவரப் பெயர் மாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.

Philip Morris 2003-ஆம் ஆண்டில் அதன் பெயர் Altria குழுமத்துக்கு மாற்றப்பட்டது.

Philip Morris நிறுவனத்துக்குக்கீழ், அப்போது Marlboro, L&M, Chesterfield புகையிலைத் தனிமுத்திரைகளும், உணவு உற்பத்தி நிறுவனமான Kraft General Foods-உம் செயல்பட்டன.

புகையிலைப் பொருள்கள் தொடர்பான எதிர்மறையான கண்ணோட்டத்திலிருந்து Kraft-ஐப் பாதுகாக்கப் பெயர் மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Datsun

World Wrestling Federation2002-ஆம் ஆண்டில் அதன் பெயர் World Wrestling Entertainment என்று மாற்றப்பட்டது.

WWF என்ற குறும்பெயரைப் பயன்படுத்துவதன் தொடர்பில் உலக வனவிலங்கு நிதியத்துடன் (World Wildlife Fund) தொடர்ந்த வழக்கை அடுத்து World Wrestling Federation அதன் பெயரை மாற்றிக்கொண்டது.

Kentucky Fried Chicken 1991-ஆம் ஆண்டில் அதன் பெயர் KFC என்ற குறும்பெயருக்கு மாற்றப்பட்டது.

‘Fried’ அதாவது ‘பொரித்த’ என்ற வார்த்தையால் ஏற்படும் ஆரோக்கியமற்ற கண்ணோட்டத்தை நீக்க, பெயர் மாற்றப்பட்டது என்று கூறப்படுகிறது.   

Related Articles

Leave a Reply

Back to top button