வாழ்க்கைக்கு அழகைக் கொடுப்பதில் பெண்கள் முக்கிய பங்கு வகிக்கின்றார்கள் என்பது உண்மை பெண்கள் இயற்கையிலேயே அழகு. அந்த இயற்கை அழகினைப் பராமரித்து பாதுகாக்க வேண்டிய கடமை பெண்களுக்கு உள்ளது நம்மில் அனேகமானோர் தமது அழகினைப் பராமரித்து வந்தாலும் ஒரு சிலர் விதிவிலக்காக உள்ளனர் .
சில பெண்கள் இயற்கையான அழகு போதும் என்ற கொள்கையுடன் இருப்பதால் தங்களைக் கவனிப்பதில் தவறிவிடுகின்றார்கள் . இவ் எண்ணத்திலிருந்து சற்று விலகி தங்கள் அழகை பாதுகாக்க வேண்டும் .
ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய சருமம் தூய்மையானதாக இருக்கின்றதா என்று தெரிந்து கொள்வதோடு அதனை ஆராய்ந்து அதற்கு ஏற்றாற்போல சரியான பராமரிப்பினை செய்வது சிறந்தது .
குறிப்பாக எந்த வயதினர் எந்தப் பராமரிப்பை மேற்கொள்ளவேண்டும் . உதாரணமாக தோலின் தன்மை மாறுபடும் . வயதிற்கேற்றார்போல தோலின் தன்மை மாறுபட்டுக்கொண்டிருக்கின்றது .
குறிப்பாக பருவமடைந்த வயதிலிருந்து தோலின் தன்மை பல காரணங்களினால் மாறுபட்டுக்கொண்டிருக்கின்றது.அதற்கேற்றார்போல் சரும பராமரிப்பு மேற்கொள்ளவேண்டும் . அழகு பராமரிப்பானது ஒவ்வொருவரும் தத்தமது வசதிற்கேற்றால்போல் மேற்கொள்ளவேண்டும் . உதாரணமாக, வசதி குறைந்தவர்கள் இயற்கையில் கிடைக்கும் பொருட்களான ( பழங்கள், பால் ,தயிர் ,தேன், கடலைமா ) உபயோகித்து வீட்டில் இருந்தவாறு பராமரிப்பை மேற்கொள்ளலாம் . வசதி உள்ளவர்கள் அழகு நிலையங்களில் தேர்ச்சி பெற்ற அழகு கலை நிபுணர்கள் மூலமாக தங்களது அழகு பராமரிப்பை மேற்கொள்ளலாம் .
எந்த வகையிலாவது பெண்கள் தமது அழகினை மேம்படுத்துவது அவசியமானது. மேலே கூறப்பட்டுள்ளவாறு பெரும்பாலன பெண்கள் தம்முடைய சருமத்தின் தன்மை முறைமை தெரியாமல் மேம்படுத்திக்கொண்டிருக்கின்றார்கள் . அவ்வாறான பெண்கள் தேர்ச்சி பெற்ற அழகுக்கலை நிபுணரின் ஆலோசனைகளுக்கேற்ப தமது சரும பராமரிப்பை மேற்கொள்வதால் குறுகிய காலத்தில் சிறந்த சரும பராமரிப்பு மூலம் தமது அழகை மேம்படுத்திக்கொள்ளமுடியும் .
திருமதி சுமன்ராஜ் அமுதா
BTHD Makeup Artist , Ammu அழகுக்கலை பணிப்பாளர், வவுனியா .