சருமத்தை தூய்மையாக்குவதாக எண்ணி அடிக்கடி முகத்துக்கு ஸ்கிரப் பயன்படுத்தக் கூடாது. அது சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப்பசையை நீக்கிவிடும். அது சருமத்துக்குக் கடுமையானதாவும் இருக்கும். முகத்தை மென்மையாதான் பராமரிக்கவேண்டும். இரண்டு வாரத்துக்கு ஒரு தடவை ஸ்கிரப் பயன்படுத்தினால் போதும்.
எக்காரணம் கொண்டும் பருக்களை கிள்ளிவிடக் கூடாது. அதனால் பாதிப்பு அதிகம். நுண்ணுயிர் இன்னும் ஆழமாகச் சென்றுவிடும்.
உறங்கச் செல்லும் முன்பு முக அலங்காரத்ததை நீக்கிவிடவேண்டும். சோம்பேறித்தனம் கூடவே கூடாது.
ரசாயனங்களால் ஆன ப்ளீச் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். உலர்ந்த திராட்சையை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து காலையில அதைத் தினமும் சாப்பிட்டு வர சருமத்துக்கு கிடைக்கும் இயற்கை அழகு.
வெந்நீரில் குளிப்பது நல்லது என்றாலும் தலைமுடிக்யை அலச வெந்நீர் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். அது கேசத்தின் வேரை பாதிப்பதோடு பலவீனமாக்கும்.
கேசத்தை ஸ்ட்ரெயிட்டனிங் பண்ணும்போது அந்த ஹீட் வேர்களைப் பாதிக்கும். முடி உதிர்வதும் அதிகரிக்கும். அதனால அதைத் தவிர்ப்பதே பரிந்துரைக்கத்தக்கது.
இறுதியா ஒரு விஷயம். என்னதான் பியூட்டி புராடக்ட்ஸ் பயன்படுத்தினாலும் ஃபேஸ் பேக்ஸ் போட்டாலும் கிடைக்காத பொலிவு… ஒரு விஷயத்தைப் பண்ணினா கிடைத்துவிடும். அது நன்றாகச் சாப்பிடுவதும் நிறைய தண்ணீர் குடிப்பதுமே. ….