செய்திகள்விளையாட்டு

இனிங்ஸ் தோல்வியைத் தவிர்க்கும் கடும் முயற்சியில் பரியோவான் கல்லூரி!!

Battle of the north

“வடக்கின் போர்” இன்றைய ஆட்டம் காலை 10 மணிக்கு ஆரம்பமானது. நேற்றைய தொடர்ச்சியாக முதலில் பரியோவான் கல்லூரி துடுப்பெடுத்தாடியது.
இன்று காலை வேளையிலான நிலைவரங்களின் படி, பரியோவான் கல்லூரி அணி, மதிய இடைவேளை வரை 42 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 119 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. பிற்பகல் ஆட்டத்தில் சென்ஜோன்ஸ் அணி 127 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்திருந்த நிலையில் இனிங்ஸ் வெற்றியைப் பெறும் நோக்கில் மீண்டும் பரியோவானை துடுப்பாட மத்தி அழைத்தது.

மீண்டும் துடுப்பாடிய பரியோவான் இன்றைய ஆட்ட நிறைவு வரை 7 ஆட்ட. இழப்புக்கு 137 ஒட்டங்களையே மிக கஷ்ரப்பட்டு பெற்றுள்ளது.


இன்னும் 20 ஒட்டங்களுக்குள் நாளை எல்லா விக்கட்டுக்களையும் பரியோவான் இழந்தால் மத்தி நாளை இனி௩்ஸ் வெற்றியைப் பெறும்.என எதிர்பார்க்கப்படுகிறது.


சாதாரண வெற்றியா ? இனிங்ஸ் வெற்றியா ? என நாளைய துடுப்பாட்டச் சமர்க்களமே தீர்மானிக்கும். .எவ்வாறு இருப்பினும் நாளையும் இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க மிக பகீரத முயற்சியை பரியோவான் அணி மேற்கொள்ள வேண்டும்.

மத்தியின் வேங்கைகளின் அபார தடுப்பாட்டமே இனிங்ஸ் வெற்றியை மத்திக்குப் பெற்றுத்தரும். எது எப்படி இருப்பினும் நாளை முற்பகல் வேளை வடக்கின் போர் முடிவுக்கு வரும் என எதிரபார்க்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Back to top button