செய்திகள்விளையாட்டு

“போதையற்ற சமூகத்தை கட்டியெழுப்புவோம்” என்ற பெரும் குறிக்கோளுடன் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி!!

Basketball tournament

அனைத்துலக தமிழர் மேம்பாட்டு நிதியத்தின் பேராதரவுடன் பீனிக்ஸ் இளைஞர் கழகமும் இளந்துளிர் விளையாட்டு கழகமும் இணைந்து நடாத்தும் “போதையற்ற சமூகத்தை கட்டியெழுப்புவோம்” என்ற பெரும் குறிக்கோளுடன் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் மொத்தமாக 24 அணிகள் போட்டியிட்டு
இறுதியில் புதிய பாரதி அணியினர் முதல் இடத்தினையும்
குறிஞ்சி அணியினர் இரண்டாம் இடத்தினையும்

இளந்தென்றல் அணியினர் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டனர்

வளர்ந்து வரும் அணியாக ஓயாத அலைகள் அணியினர் தெரிவாகினர்

இந்த போட்டியில் பிரதம விருந்தினராக யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், திரு த.சத்தியமூர்த்தி அவர்களும்

கெளரவ விருந்தினராக கரைச்சி பிரதேச சபை தவிசாளர், திரு அ.வேளமாலிகிதன் அவர்களும்

சிறப்பு விருந்தினர்களாக, கிளிநொச்சி மாவட்ட சாரணர் சங்கத்தலைவர் திரு கி.விக்னராஜா,நிர்டோ அமைப்பு செயலாளர், மருத்துவர்.திரு பழனிச்சாமி சச்சிதானந்தன்.(பல்துறை வளவாளர்) செங்கலடி,
மட்டக்களப்பு அவர்களும்,

கிழக்கு பல்கலைக்கழகம்,சமூக விஞ்ஞானம்.முன்னாள் சிரேஸ்ட விரிவுரையாளர் வைத்தியர் திரு ஞானமுத்து தில்லைநாதன் {சமூக ஆர்வலர், தலைவர் நிர்டோ நிறுவனம்} அவர்களும்

கிளிநொச்சி உளநல பிரிவு மற்றும் போதைப்பொருள் புனர்வாழ்வழிப்பு மையத்தின் கடமை வைத்தியர் திரு இராமமூர்த்தி ஜனத் அவர்களும்

மாங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு GNS சிறிந்தே அவர்களும்

சிவாகம கிரிய திலகம் வை. கு. ஜெயசுதக் குருக்கள் அவர்களும்

விஸ்டம் லைப் செண்டர் இணைப்பாளர் அருட்பணி பி. டாணியல் அவர்களும்

அமெரிக்கன் இலங்கை மிஷன் திருச்சபை குரு அருட்திரு SR சதீஸ்குமார் அவர்களும்

அனைத்துலக தமிழர் மேம்பாட்டு நிதியத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சங்கரப்பிள்ளை சோதிநாதன் அவர்களும்

அனைத்துலக தமிழர் மேம்பாட்டு நிதியத்தின் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு வி. சுதர்சன் அவர்களும்

கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் திருமதி சி. சரோஜாதேவி அவர்களும்

கரைச்சி பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் திரு ப.போல்ராஜ் அவர்களும்

முறிகண்டி கிராம அபிவிருத்திச் சங்கத்தலைவர் திரு வ. செல்வகுமார் அவர்களும்

ஈழத்து எழுத்தாளர் வவுனியூர் றஜிபன் அவர்களும்

நலன் விரும்பி திரு ஜெயச்சந்திரன் அவர்களும்

ஆசிரியர் செல்வி செ. டயானா அவர்களும்

பொன்நகர் கிராம அபிவிருத்திச் சங்க செயலாளர் திரு சி. சிவகாந்தன் அவர்களும்

இந்துபுரம் கிராம அபிவிருத்திச் சங்கம் தலைவர் திரு ம. பாலேந்திரன் அவர்களும்
கலந்து சிறப்பித்திருந்தனர்.

கார்கீஸ் விவசாயபண்ணையின் முகாமையாளர் திரு இசையாளன் வழங்கிய “நாடும் நலமும்” நாட்டியாஞ்சலி நிகழ்வும்

ஈழத்து எழுத்தாளர் வவுனியூர் றஜிபன் அவர்களின் கதை உருவாக்கத்தில் மூத்த கலைஞர் உமாகாந்தன் அவர்களின் நெறியாள்கையில் “மனமே மாறாயோ” வீதி நாடகமும் இடம்பெற்றமை சிறப்பான விடயமாகும்.

Related Articles

Leave a Reply

Back to top button