ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பவற்றிலிருந்து 25 வீத வரியை அறவிட நிதி அமைச்சு எடுத்துள்ள தீர்மானம் தொடர்பில் நாளைமறுதினம் திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்படவுள்ளது.
இதன்போது நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவின் இந்த முடிவுக்குக் கடும் எதிர்ப்பை வெளியிட அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, மகிந்த அமரவீர, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் தீர்மானித்துள்ளனர்.
அத்துடன், தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, சுற்றாடல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோரும் எதிர்ப்பை வெளியிடவுள்ளனர்.
இதனால் அமைச்சரவையில் சூடான வாதப்பிரதிவாதங்கள் நாளைமறுதினம் திங்கட்கிழமை இடம்பெறக்கூடும் என சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.