இலங்கைசெய்திகள்

பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபைத் தெரிவும்!!

தென்மராட்சி பகுதியின் முன்னணி சனசமூக நிலையங்களில் ஒன்றான மட்டுவில் தெற்கு வளர்மதி சனசமூக நிலையத்தின் 2021-2022ம்ஆண்டுக்கான புதிய நிர்வாகசபைத் தெரிவும் பொதுக்கூட்டமும் இன்று நடைபெற்றது.

ஸ்தாபகர் பொன்.நாகமணி ஞாபகார்த்த கல்விக்கழக மண்டபத்தில் பி.ப. 4 மணிக்கு தலைவர் சி. டினேசன் தலைமையில் நிகழ்வு ஆரம்பமானது .

ஒன்றுகூடல் நிகழ்வில் அகவணக்கத்தை அடுத்து தலைமை உரையும் செயலாளர் சி. மதியழகனின் கடந்தகால செயற்பாட்டு அறிக்கையும் வாசிக்கப்பட்டதுடன் பொருளாளரின் கடந்த வருடத்திற்கான வரவு செலவு நிர்வாக அறிக்கையும் வாசிக்கப்பட்டது. தொடர்ந்து புதிய நிர்வாகசபை உறுப்பினர்கள் தெரிவு நடைபெற்றது.

தலைவராக கனகலிங்கம் திவாகர்
செயலாளராக சரவணை கிருஷ்ணன்
பொருளாளராக சிவலிங்கம் பகீசன்
உபதலைவராக சண்முகம் சுரேந்திரன்
உப செயலாளராக செல்லையா லோகீஸ்வரன் ஆகியோரும்

போசகரும் கணக்காய்வாளருமாக திரு. கணபதி ஶ்ரீதரனும்

நிர்வாகசபை உறுப்பினர்களாக

 1. குமுதினி பார்த்தீபன்
 2. சின்னத்துரை டினேசன்
 3. சண்முகம் கஜேந்திரன்
 4. சிவாஜினி லூயிஸ்மென்ரேசா
 5. செல்லன் இந்திரன்
 6. சின்னப்பொடி சுரேஸ்
 7. கௌரி சோமசுந்தரம்
 8. ஞானச்சந்திரன் அபிவர்ணன்
 9. சிவநேசன் என்பவர்களும்

ஆலோசனைச்சபை உறுப்பினர்களாக

 1. வெள்ளையன் சுப்பிரமணியம்
 2. சிவசம்பு மதியழகன்
 3. இ. குவேந்திரராசா ஆகியோரும் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டனர்.

Related Articles

Leave a Reply

Back to top button