உலகம்செய்திகள்

மீண்டும் அவுஸ்திரேலிய எல்லை திறப்பு!!

Australia

பூரண தடுப்பூசி பெற்ற சுற்றுலாப்பயணிகளுக்காக அவுஸ்திரேலியா தமது எல்லையினை இன்று முதல் திறந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 2 வருடங்களாக நாடு மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த கட்டுப்பாடுகளை அவுஸ்திரேலியா தளர்த்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கமைய, சர்வதேச விமானப் போக்குவரத்தின் 50 விமானங்கள் அவுஸ்திரேலியாவை அண்மித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

அவுஸ்திரேலியாவில் பாரிய தொழிற்துறையாக சுற்றுலாத்துறையும் விளங்குகின்ற நிலையில், 5 சதவீதம் பேர் அதில் சேவையாற்றுகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button