இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

ஹெரோயின் பறிமுதல் சோதனைக்கு சென்ற பொலிஸார் மீது தாக்குதல்

கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருள் சோதனைக்கு சென்ற பொலிஸ் அதிகாரிகள் குழுவை தாக்கிய குற்றச்சாட்டில் 6 பெண்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அனுராதபுரம் பிரதேச போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் தாக்குதலில் காயமடைந்துள்ளனர்.

ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவரை கைது செய்ய முற்பட்ட போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button