தாக்குதலில் காயமடைந்த பாடசாலை மாணவன் ஒருவர் வவுனியா பொது வைத்தியசாலையின் விபத்துப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு விபத்து விடுதிக்குள் அத்துமீறி உள் நுழைந்த நான்கு பேரடங்கிய குழுவினர் மீண்டும் அம் மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பி சென்றுவிட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது .
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் ,
நேற்று (20) கோவில்குளம் பகுதியில் இடம்பெற்ற குழு மோதலில் பாடசாலை மாணவன் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலை விபத்துப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது எனினும் நேற்று இரவு 11 மணியளவில் வைத்தியசாலையின் விபத்துப்பிரிவிற்குள் அத்துமீறி நுழைந்த நான்கு பேரடங்கிய குழுவினர் குறித்த மாணவன் மீது மீண்டும் தூக்குதல் நடாத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டார்கள் . இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
கடமையிலிருந்த பாதுகாப்பு ஊழியர்கள், பொலிசாரின் பாதுகாப்பு நடைமுறைகளையும் மீறி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது
இது குறித்து வைத்தியசாலை நிர்வாகத்தினரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் காயமடைந்த பாடசாலை மாணவனிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டு தாக்குதல் நடாத்திய குழுவினர் இனங்காணப்பட்டுள்ளனர் .
அவர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். செய்தியாளர் – கிஷோரன்