நேற்று ( ஞாயிற்றுக் கிழமை) நைஜீரியாவில் உள்ள தேவாலயத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஒண்டோ மாநிலத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் ஆராதனையின் போது துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டும் பலர் காயமடைந்தும் உள்ளனர்.
இத்தாக்குதலில் அனேகம் சிறுவர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் இந்த தாக்குதலுக்கு யாரும் உரிமை கோரவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.இச்சம்பவத்தின் போது தலைமை பாதிரியார் கடத்தப்பட்டுள்ளாரெனவும் கூறப்பட்டுள்ளது.