செய்திகள்தொழில்நுட்பம்முக்கிய செய்திகள்

அட்லாண்டிக் பெருங்கடலில் மர்மத் துளைகள் – விஞ்ஞானிகள் ஆய்வு!!

Atlantic sea

கடலுக்கு அடியில் காணப்படும் பெருந்துளைகள் குறித்த ஆய்வு ஒன்று அட்லான்டிக் பெருங்கடலில் இடம்பெற்றுள்ளது. 

தேசிய கடல்சார் சூழலியல் நிர்வாகம்(என்.ஓ.ஏ.ஏ.) என்ற அமைப்பு சார்பில் விஞ்ஞானிகள் குழு ஒன்று அட்லாண்டிக் பெருங்கடலில் ஆய்வு மேற்கொண்டது.

இந்த ஆய்வின் போது அட்லாண்டிக் கடலின் ஆழமான தரைப்பகுதியில் சுமார் 2,540 அடி ஆழத்தில் வரிசையான முறையில் மர்மான துளைகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்த துளைகள் மனிதனால் உருவாக்கப்பட்டதை போலத் தோன்றினாலும், கடலின் அடிப்பகுதிக்குச் சென்று எந்தவொரு மனிதராலும் இப்படி துளைகளை அமைக்க முடியாது.

எனவே சுற்றியிருக்கும் வண்டல் குவியல்களால் இந்தத் துளைகள் உருவாக்கப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இருப்பினும் தொடர்ச்சியான ஆய்வுகள் மூலம் இதற்கான காரணத்தைக் கண்டறிய முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.  

Related Articles

Leave a Reply

Back to top button