அந்தமான், நிக்கோபாா் பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் வருவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
‘அசானி’ என பெயரிடப்பட்ட புயல் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது. மேற்படி புயல்
வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை புயலாகவும் வலுவடையும் எனக் கூறப்படுகின்றது.
காற்றழுத்த தாழ்வு பகுதி அந்தமான் தீவை நோக்கி தொடர்ந்து நகர்ந்து வருவதால் அங்கு பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால் நாளை மறுநாள் வரை அந்தமான் நிக்கோபா் பகுதிகளில் உள்ள அனைத்து சுற்றுலா மையங்களும் மூடப்பட்டுள்ளன.