உலகம்செய்திகள்

ஹெரிப்பொட்டர் டோபி கதாபாத்திரம் நிஜத்திலும் பிறந்துள்ளதா!!

Artwork Cub

ஐரோப்பாவில் உள்ள ஒரு மிருகக்காட்சி சாலையில் 90 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக ஆர்ட்வார்க் குட்டியொன்று பிறந்துள்ளது.

இது அச்சு அசலாக உலகப் புகழ்பெற்ற நீளத் திரைப்படமான ஹெரிப்பொட்டரில் வரும் ‘டோபி’ என்ற கதாப்பாத்திரத்தை ஒத்துள்ளது.

செஸயரில் உள்ள செஸ்டர் உயிரியல் பூங்கா மிருகக்காட்சி சாலையில் இந்த உயிரினம் பிறந்துள்ளது.

இது ஹெரிபொட்டர் – டோபி கதாப்பாத்திரத்தை ஒத்திருப்பதால் இவ்வுயிரினத்திற்கும் டோபி என பெயரிட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி 4ஆம் திகதி இவ்வுயிரினம் பிறந்தது.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இதன் பாலினம் பெண் என உறுதி செய்யப்பட்டது.

ஐரோப்பாவில் 90 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த முதல் ஆர்ட்வார்க் இது என்பதுடன், ஆப்பிரிக்காவின் சஹானா பகுதியில் இவ்வுயிரினம் அதிகம் வேட்டையாடப்படுவதால் மிகவும் அரிதான உயிரினங்களில் ஒன்றாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Back to top button