இலங்கைசெய்திகள்

திருமலையில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

arrested

திருகோணமலை – தோப்பூர் பிரதேசத்தில் ரி – 56 ரக துப்பாக்கி ஒன்றை மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

கந்தளாய் – சூரியபுர பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து குறித்த சந்தேகநபர் துப்பாக்கியுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதானவர் பாலத்தோப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button