இலங்கைசெய்திகள்

சிறையில் இருந்து விடுவிப்பதாக கூறி கப்பம் கோரியவர்கள் கைது!!

arrested

செய்தியாளர் – சக்தி

மட்டு. காத்தான்குடியில் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டு விளக்கமறியில் இருக்கும் ஒருவரை நீதிமன்றில் இருந்து வெளியில் எடுத்து தருவதாககூறி குறித்த நபரின் தயாரிடம் 2 இலச்சம் ரூபா கப்பமாக கோரிய தாயாரின் சகோதரன் உட்பட இருவரை வியாழக்கிழமை (06) மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கு முன்னால் வைத்து வான் ஒன்றுடன் கைது செய்ததுடன் பிரதான சூத்திராதி தப்பி ஓடியுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

காத்தான்குடியைச் சேந்த ஆண் ஒருவர் கடந்த முதலாம் திகதி ஜஸ் போதைப் பொருளுடன் காத்தான்குடி பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார். அவரை நீதிமன்றில் இருந்து வெளியில் எடுத்து தர 2 இலச்சம் ரூபாவை கல்கமுக பிரதேசத்தைச் சேர்ந்த முகமட் காசிம் முகமட் றிபான் என்பவர் கோரியுள்ளதாக காத்தான்குடி முதலாம் பிரிவு மோதினார் லேன் சாவியா வீதியைச் சேர்ந்த பெண் ஒருவர் பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்

இதனையடுத்து சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்காவின் ஆலோசனைக்கமைய மட்டு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி ப.கே.ஹாட்டியாராச்சியின் வழிகாட்டலில் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி முகமட் ஜெஸலி தலைமையிலான பொலிசார் சம்பவதினமான வியாழக்கிழமை மட்டக்களப்பு நீதிமன்றத்துக்கு முன்னால் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதன்போது வான் ஒன்றில் வந்திருந்தவர்களை பொலிசார் சுற்றிவளைத்தபோது அங்கிருந்து கப்பம் கோரிய பிரதான நபர் தப்பி ஓடியுள்ள நிலையில் வானில் வந்திருந்த முறைப்பாடு செய்தவரின் சகோதரன் மற்றும் வான்சாரதியை கைது செய்ததுடன் வான் மற்றும் 4 கையடக்க தொலைபேசிகள் போன்ற ஆவணங்களை மீட்டுள்ளனர்.

கடந்த 3 தினங்களாக குருநாகல் கல்கமுக பிரதேசத்தைச் சேர்ந்த முகமட் காசிம் முகமட் றிபான் என்பவர் விளக்கமறியலில் இருக்கும் நபரின் மனைவியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உனது கணவருக்கு பல்வேறு வழக்குகள் இருப்பதாகவும் அவரை நீதிமன்றில் எந்தவிதமான ஆவணங்களும் இல்லாமல் வெளியில் எடுத்துதரமுடியும் இதற்கு 2 இலட்சம் ரூபா கப்பமாக கோரியுள்ளார்.

அவர் மாமியாரிடம் தெரிவித்ததையடுத்து அவர் மருமகளிடம் அவன் கதைப்பதை ரைக்கோடிங் செய்து தனக்கு அனுப்புமாறு ஆலோசனை வழங்கிவந்துள்ளார். இதில் தொலைபேசியில் கப்பம் கோரியவர் கல்கடுக பிரதேசத்தில் சகோதானின் வீட்டிற்கு சென்று வந்தபோது அங்கு கதைத்த முகமட் றிபான் குரல் என அடையாளம் கண்டு கொண்ட நிலையில் கப்பம் கோரியவர் வியாழக்கிழமை மட்டக்களப்பு நீதிமன்றிற்கு முன்னால் வருவதாக தெரிவித்துள்ளான்.

இதன் பிரகாரம் கப்பம் கோரிய குறித்த நபர் கல்கமுவ பிரதேசத்தில் வான் ஒன்றை வாடகைக்கு சாரதியுடன் எடுத்துக் கொண்டு வியாழக்கிழமை அதிகாலை 4 மணிக்கு தன்னுடன் கல்கமுவ பிரதேசத்தில் திருமணம் முடித்துள்ள முறைப்பாடு செய்திருந்த பெண்ணின் 46 வயதுடைய சகோதரனையும் அழைத்துக்கொண்டு மட்டக்களப்பு நீதிமன்றிற்கு முன்னால் வந்ததுகாத்திருந்தனர் எனவும் பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதில் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு. தலைமையக பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button