மூன்று மாதங்களேயான பச்சிளம் கைக்குழந்தையை 7 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்து, அந்த நிதியைப் பயன்படுத்திப் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டனர் எனக் கூறப்படும் தம்பதியினா் குருநாகல் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனா் என சிங்கள நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குருநாகலிலுள்ள சட்டத்தரணி ஒருவரிடம் கடிதமொன்றை பெற்றுக்கொண்டு, அநுராதபுரத்தில் உள்ள தம்பதியினருக்கே குழந்தை இவ்வாறு விற்கப்பட்டுள்ளது.
ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட 28 வயதான பெண்ணின் பையில் சிறிய குழந்தையொன்றின் ஆடை இருந்துள்ளது. அதனைத் தொடர்க்கு முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே குழந்தை விற்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குழந்தையை விற்கு பெற்ற பணத்தில் 30 ஆயிரம் ரூபாவுக்கு ஹெரோயின் வாங்கி விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். எஞ்சிய பணத்தை வங்கியில் வைப்பிலிட்டுள்ளனர்.