கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் நான்கு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி, சார்ஜன்ட் மற்றும் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
போலியான பெயரில் டுபாய் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த சந்தேக நபர், பொலிஸ் அதிகாரிகளிடம் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இந்த சந்தேக நபர் கொலை உள்ளிட்ட பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளதுடன், அவருக்கு எதிராக விமானப் பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.