
கொழும்பு – இந்திய விசா விண்ணப்ப மையத்தில் இடம்பெற்ற, களவாடல் சம்பவம் தொடர்பாக, அந்த மையத்தின் பெண் சுகாதார ஊழியர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில் சந்தேகநபர்களிடம் இருந்து 300,000 ரூபா பெறுமதியான மடிக்கணினி, கமரா மற்றும் ஐபேட் உள்ளிட்ட உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த 15ஆம் திகதி சில நாட்களுக்கு மூடப்பட்டு திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது.
கடந்த 14 ஆம் திகதி விசா விண்ணப்ப மையத்திற்குள் நுழைந்த சிலர், அங்கிருந்த பல உபகரணங்களை களவாடிச் சென்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்திருந்தார்.