இலங்கைசெய்திகள்

போதை மாத்திரைகள், வாள்களுடன் முன்னாள் இராணுவச் சிப்பாய் கைது!!

arrested

போதை மாத்திரைகள் மற்றும் ஐந்து வாள்களுடன் முன்னாள் இராணுவச் சிப்பாய் ஒருவர் நேற்றிரவு
கைதுசெய்யப்பட்டுள்ளார்.

புத்தளம், செம்பந்தலுவ பிரதேசத்தைச் சேர்ந்த நபரே சுற்றிவளைப்பின்போது கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

புத்தளம், செம்பந்தலுவ பிரதேசத்தில் புத்தளம் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகள் இணைந்து இந்தச் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த நபரிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 5 வாள்கள், 3 கிராம் 80 மில்லிகிராம் போதை மாத்திரைகள் உள்ளடங்கிய 12 கார்ட்கள் என்பன கைபற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர் புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related Articles

Leave a Reply

Back to top button